இந்தியாவில் 1994-ம் ஆண்டு துவங்கப்பட்டது மெர்சிடீஸ் பென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். அன்று முதல் இன்று வரை வாடிக்கையாளர் சேவைக்காகவும், அதிநவீன தொழில்நுட்ப புரட்சியினாலும் சொகுசு கார் சந்தையின் முன்னொடியாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஈடுபாட்டுத் திட்டமான 'லக்ஸ் டிரைவ்' சென்னையின் பென்ஸ் கார் வாடிக்கையாளர்களை வசீகரித்திருக்கிறது எனலாம்.